
கண்களை விட்டு அகல மறுக்கிறது ..
ரோட்டோரமாய் கைநீட்டி
வயிறு கழுவும்
ஏழைத்தாயின்
வற்றிய மார்பில்
உதடுகுவித்து பால் தேடிய
பிஞ்சுக் குழந்தையின்
ஏக்கப்பார்வை ....!
தாய் வயிற்றில் இருந்தால்தான்
தன் வயிற்றுக்கு உணவு என்று
எப்படித்தெரியும்
அந்த பிஞ்சுக்கு ....!
-----விவேகப்ரசன்னா .