எத்தனை காலமாயிற்று ....?


வெகு காலமாகிவிட்டது
நல்ல மழை பெய்து .....!
வெகு நாட்கள் ஆகிவிட்டன
குறைவான வெயில் வீழ்ந்து ....!
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
பள்ளித் தோழனை பார்த்து ....!
பல மாதங்கள் ஆகிவிட்டன
இனிய பேரனைப் பார்த்து ...!
என்னென்னவோ கணக்குகள்
எத்தனையோ நினைவுகள் ....!
பின்னோக்கி செல்கையில்
ஆனந்தங்களும் ..அழுகைகளும் ...!
சிரித்தாலும் அழுதாலும்
கண்களில் குளமாய் நீர்
வித்யாசம் தெரியாமல் .......!
நான் என்னிலிருந்து விலகி
வெளியே ...வெளியே ..வெளியே ...!
எத்தனை காலமாயிற்று
இது நிகழ்ந்து ...........................?
****************************விவேகப்ரசன்னா .********
blog comments powered by Disqus