ஒவ்வொருவரும் ஞானியாக ....


ஒரு பணக்காரர் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார் .எதிர் இருக்கையில் ஒரு முதியவர் ,கிழிந்த உடைகளுடன் மிகப் பணிவாய் அமர்ந்திருந்தார் .அவரை மிக அலட்சியமாய் பார்த்த பணக்காரர் ,அவரை சின்னச்சின்ன வேலைகள் செய்ய ஏவியதோடு மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார் .
ஊர் வந்தது .ரயில் நிலையத்தில் பல முக்கிய மனிதர்கள் திரண்டிருந்து ,அந்த முதியவரை மாலையிட்டு வரவேற்றார்கள் .அவர் ஒரு பெரிய ஞானி என்று அப்போது தான் பணக்காரருக்கு தெரிய வந்தது .பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார் .அந்த முதியவர் சொன்னார் "உனக்கான மன்னிப்பை நான் தரமாட்டேன் .நீ சந்திக்கும் ஒவ்வொரு ஏழை முதியவரிடமிருந்தும் அதை கேட்டு ப்பெற்று க்கொள் "
ஒரு ஞானியை ஏழை யாக ப்பார்த்த பணக்காரர் ,அதற்க்கு பிறகு ஒவ்வொரு ஏழை யையும் ஞானியாக ப்பார்க்கத்தொடங்கினார் .
இதனால் சொல்ல வருவது ......யாரையும் ஏளன மாகவோ .,கீழ்த்தரமாகவோ .,பார்க்ககூடாது .
சரி .....இன்றைய தளம் என்ன ....?
நீங்கள் படிக்க விரும்பும் ஆனால் படிக்க நேரம் இல்லாததால் படிக்க முடியாத இணைய தளப் பக்கங்கள் ,வலைப் பதிவுகள் முதலியவற்றை அப்படியே ஆடியோ வாக மாற்றி தரும்ஐ ஸ்பீச் தளம் .இங்கே நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆடியோவாக மாற்றிக்கொள்ளலாம் .இணையிறக்கி பயன்படுத்தலாம் .நமது தளத்திலும் இடம்பெற செய்யலாம் .
நாளை சந்திக்கலாம் ....வர்ட்டா ...!
blog comments powered by Disqus