Visara

நல்லவை மட்டும் .


இந்த தளத்தின் மூலம் நான் பகிர விரும்புவது ,நமது முன்னேற்றம் சார்ந்த விஷயங்கள் தான் .நமக்கு உதவும் ,உதவிய ,உதவப்போகிற மனிதர்கள் .உயிரினங்கள் ,அனைவருக்கும் நன்றி பாராட்டும் விதமாக இந்த தளத்தை நான் வடிவமைக்க விரும்புகிறேன் .

இந்தியாவைப் பொறுத்தவரை நாம் இன்னும் இணையத்தை பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை .அதற்க்கு உதவும் வகையில் பல தமிழ் தளங்கள் இருக்கின்றன இருந்தாலும் இன்னும் இன்னும் வளர வேண்டும் என்பதே எனது ஆசை .


தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை ,கதைகள் ,கவிதைகள் ,பயனுள்ள தளங்களின் அறிமுகங்கள் ,என எனக்கு தெரிந்ததை ,நான் பார்த்ததை,நான் கேள்விப்பட்டதை எல்லாம் (உங்களுக்கு நிச்சயம் பயன்படக்கூடியதை மட்டும் ) எழுத இந்த தளத்தை நான் பயன்படுத்த போகிறேன் .தமிழ் மூலம் நாம் மிக எளிதாக இணையத்தை அதன் பயன்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும் ,அதற்க்கு இந்த தளம் ஒரு சிறிய அளவிலாவது உபயோகப்பட்டால் மகிழ்வேன் .நன்றி .

வெல்ல ....!


சந்திக்காமலே இருந்திருக்கலாம்
சந்தோஷமும் ,சங்கடமும்
இல்லாமல் இருந்திருக்கும் ...!

பேசாமலே இருந்திருக்கலாம்
பேச்சுக்களும் ,ஏச்சுக்களும்
இல்லாமலே இருந்திருக்கும் ...!

சாதனைப் பாதை நோக்கி
சக்கரம் கட்டிய பாதகங்கள்
சாக்கடையில் வீழ நேர்ந்திருக்காது ...!

இனி என்ன சொல்ல ...
இரவை நோக்கி நகர்கிறேன் மெல்ல ...
நடந்தவை உன் குற்றமல்ல ..
நாளை விடியல் நான் வாழ்வில் வெல்ல ...!

..................................விவேகபிரசன்னா ...................................

காதல் சனியன்

எத்துனை மேகக் கூட்டங்கள்
மறைத்து நிற்பினும்
தள்ளிவிட்டு வெளித்தோன்றும் ....சூரியன் ..!


எத்துனை வழிமுறைகள் பின்பற்றினும்
ஏதேனும் வழியில் குருதி தேடிவரும் ..கொசுக்கள் இனம் ...!


எத்துனை வாசனை திரவியங்கள் தெளித்தாலும்
மீறி நாசியில் நுழையும் ..சாக்கடை நாற்றம் ...!

எத்துனை பாதுகாப்பு வைத்தியம் பார்ப்பினும்
மீறி நேரம் பார்த்து வெளியேறும் ...உடலிலிருந்து உயிர் ...!


வாசல் கதவும் ஜன்னல்களும் இறுக அடைத்திருப்பினும்
இடுக்கு தேடி உள் நுழையும் ...காற்று ...!


இடியும் மின்னலும் பார்வையை மறைப்பினும்
அழகாய் முகம் காட்டும் ...வானவில் ...!

அழுந்த கண்மூடி அமர்ந்திருப்பினும்
அடிகண்ணிலிருந்து ஆட்டம் காட்டும் ...ஓர் உருவம் ...!


இதையெல்லாம் போலத்தான்
இறுக மூடியிருந்த என் மனக்கதவை
அடித்து நொறுக்கி உள் புகுந்தது ....காதல் சனியன் ..!

.......................................................விவேகபிரசன்னா .............................

என்னை பாதித்த தளங்கள் ..(நல்ல விதமாகத்தான் )

zwani.com myspace graphic comments


போன வருஷம் இதே நேரம் (அதாவது ஒரு வருடம் முன்பு என்று அர்த்தம் ) எனக்கு பிளாக் என்றால் என்னவென்றோ ,அதன் மூலம் நாம் நமது சிந்தனைகளை (!) வெளிப்படுத்த முடியுமென்றோ தெரியாது ....ஏன் இணையம் பற்றியும் எதுவும் தெரியாது (இப்ப மட்டும் ...?) அப்படி இருக்கையில் எனது நண்பரின் அலுவலகத்தில் கணினி இருந்ததால் சும்மா மேய்ந்தவன்னம் இருந்தேன் ..அப்போதுதான் ஒரு அற்ப்புதமான தளம் என் கண்ணில் சிக்கியது ..மிகவும் மகிழ்ந்தேன் ..தொடர்ச்சியாக அந்த தளத்திற்கு சென்றதின் மூலம் நிறைய விஷயங்கள் கணினி சம்பந்தமாக கற்றுக்கொண்டேன் ..அதன் பிரதிபலிப்பாகத்தான் இந்த தளத்தை துவங்கினேன் .ஆனால் ஆரம்பத்தில் ஏதேதோ கிறுக்கி வந்த நான் பிறகு நான் முன்பே காகிதத்தில் எழுதி வைத்திருந்த கவிதைகளை (!?) கணினிக்கு கொண்டு வந்தேன் ..இப்படியாக தான் நானும் கணினியும் காதலர்களானோம் .
அதெல்லாம் சரி நீ பார்த்து வியந்து கற்றுக்கொண்ட தளம் எது என்று நீங்கள் கேட்ப்பது (?) என் காதில் விழுகிறது ..(நல்ல காது).இதோ உங்களுக்கு அறிவிக்கிறேன் ....அந்த தளம் தமிழின் மிக பிரபலமான பிளாக் பிகேபி .உங்களுக்கு இந்த தளம் நிச்சயம் தெரிந்திருக்கும் .ஆனால் எனக்கு போன வருடம் தான் தெரியும் .நான் இன்றைக்கு ஒரு பிளாக் தொடங்கி ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதி வருகிறேன் என்றால் அதற்க்கு மிக மிக முக்கியமான காரணகர்த்தா நண்பர் பிகேபி தான் ..அவரை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் (நன்றி தலைவா ).
இந்த தளத்தைப்பற்றி தெரியாதவர்கள் (யாரேனும் இருந்தால் ) சென்று பாருங்கள் உங்களுக்கு நிஜமான தேடல் இருப்பின் (கணினி சம்பந்தமாக) கண்டிப்பாக உதவும் .

அடுத்து என்னை பாதித்த தளங்களை நாளை சொல்கிறேன் .

மீண்டும் மீண்டும் வருவேன் .

zwani.com myspace graphic comments

வணக்கம் என் ஆருயிர் நண்பர்களே ...நான் பல நாட்க்களாக ப்லாக் எழுத முடிய வில்லை .எனது பதிவுக்காக காத்திருந்த (!) உங்களுக்கு நன்றி .

இதுவரை என்னென்னமோ எழுதி வந்த நான் இனிமேல் உருப்படியாக மக்களுக்கு பயன்படும் விதமாக (!) எழுத இந்த விசாராவை பயன்படுத்த போகிறேன் .எனக்கு அதிகமாக இணையத்துடன் பழக்கமில்லை ,இருந்தாலும் எனக்கு தெரிந்ததை ,நான் தேடித்தேடி அறிந்துகொண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் .ஒவ்வொரு மனிதனின் அனுபவங்களும் பிறிதொரு மனிதனுக்கு நிச்சயம் பயன்படும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு .

எனது இந்த தளத்தை அடிக்கடி நீங்கள் பார்வை இட்டால் மட்டும் போதாது பின்னூட்டம் இட்டால் மகிழ்வேன் .(பின்னூட்டம் ன்னா கம்மன்ட் ங்கோய்)

நிறைய எழுத நினைத்தேன் ...ஆனால் வார்த்த ....வார்த்த தான் வரமாட்டேன்குது .
கண்டிப்பா நாளை வருவேன் நல்ல பல தகவல்கள் தருவேன் ..!