முள்ளங்கியும் முல்லாவும்



ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திருடும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா .

விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதிபதி கேட்டார் "பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் ...?"

முல்லா சொன்னார் "காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது .."நீதிபதி "உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி ...?"

முல்லா "மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் "

நீதிபதி "அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?"

முல்லா "அது தான் எப்படி என்று எனக்கே தெரியவில்லை "
தவறு செய்தாலும் தப்பிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை இந்த கதை சொல்ல வில்லை .
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும் என்பதை தான் முல்லா கூறுகிறார் .
துன்பம் வருங்கால் நகுக ....தெரியுமல்லவா ....?


சரி ...இன்று நாம் காணும் தளம்......?

சின்ன சின்ன சப்தங்கள் தான் இசை ,அதிலும் சில சப்தங்கள் நம்மை மிக ரம்மியமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் .அப்படி நல்ல நல்ல இசைகளின் தொகுப்புமூலம் நமக்கு அமைதியை தரும் ஒரு தளம் இது .



blog comments powered by Disqus