சீற்றத்துடன் துவங்கி தூறலுடன் தொடர்ந்த மழை நாள்
மாலை முடிந்து முன்னிரவு துவக்க நேரம்
கூடு தேடி செல்லும் பறவை க்கூட்டமாய்
வீடு தேடி செல்லும் மனிதர் க்கூட்டம்
சாலை நிறைந்த வெள்ளத்தாலும்
பாலம் வேலை நின்றதாலும்
எறும்பாய் ஊறும் வாகனங்கள்
சபித்தனர் மக்கள் ஆள்பவரை ...!
முன் நின்ற வாகனத்தில்
பின்னிருந்த பெண்ணின்
மடியில் மழலை ...
மழையின் சில சாரல்கள்
போர்த்திய துணியின் விலகலால் படவே
மிக சிறிய அழுகையும்
மிக சிறிய கொட்டாவியும் ..
ஆஹா ..எத்தனை அழகு ....
வாழ்த்தினேன் ஆண்டவனை ....!