'முட்டாள்கள் 'கிராமம் ஓன்று இருந்தது .பக்கத்து ஊர் காரன் ஒருவன் அங்கே வந்த போது உள்ளுர்காரர்கள் பயந்து ஓடி க்கொண்டிருந்தார்கள் ."வயலில் ஒரு பூதம் உருள்கிறது 'என்று அலறிக்கொண்டே .வந்தவன் பார்த்தான் .அது ஒரு தர்பூசணி பழம் ."இந்த முட்டாள்களை ஏமாற்றலாம் "என்று முடிவு செய்தான் ."கவலைப்படாதீர்கள் இந்த பூதத்தை கொன்று தின்று விடுகிறேன் "என்று பழத்தை வெட்டி சாப்பிட்டான் ."இவன் இன்னும் பெரிய பூதமாக இருப்பான் போலிருக்கிறதே "என்று நினைத்த மக்கள் ,அவன் தூங்கும் போது கல்லைப் போட்டுக்கொன்றார்கள் .
இன்னொருவன் வந்தான் .அங்கேயே தங்கினான் .தர்ப்பூசணி என்றால் என்ன என்று மக்களுக்கு சொல்லிக் கொடுத்தான் .தர்பூசணி பயிரிட்டு பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுத்தான் .ஊர் மக்கள் அவனை தலைவனாக ஏற்றார்கள் .
முட்டாள்களை ஏமாற்ற நினைத்தவன் இறந்தான் .மாற்ற நினைத்தவன் உயர்ந்தான் .
.........இதனால் சொல்ல வருவது யாதெனில் ,நாம் பிறருக்கு நல்ல விசயங்களை சொல்லிக் கொடுப்பது ,கல்லாதவர்களை மாற்ற நினைப்பது நல்லது ..சரியா ..?
****இன்று நாம் காணப்போகும் தளம் ஒரு விளையாட்டு தளம் அதுவும் குறிப்பாக கிரிகெட் தளம் .நாமாகவே கணினியில் விளையாடலாம் .உங்கள் குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும் .நீங்களும் பொழுது போக்கலாம் .தளத்தின் பெயர் கேம்ஸ்டு வின் ..
நாளை வருகிறேன் நல்ல தகவல்களுடன் ...