பாராட்டி பேசுவது எப்படி ஒரு கலையோ ,அது போலே கிண்டல் அடித்து இன்சல்ட் செய்வதும் ஒரு கலைதான் .சபியன் லூயி தொகுத்துள்ள இரண்டாயிரம் இன்சல்ட்டுகள் என்ற புத்தகத்திலிருந்து இதோ சில :
*அவனை இரண்டாவது தடவை பார்த்த போது தான் காதலித்தாள்.முதலில் பார்த்த போது அவன் பணக்காரன் என்று அவளுக்கு தெரியாது .
*சிலருக்கு தினமும் வியாதி வராவிட்டால் உடம்பு சரியாக இருக்காது .
*அவனிடம் எல்லா தீர்வுகளுக்கும் பிரச்னை இருக்கும் .
*அவள் அழகாகதான் பாடினாள்.அதை நாம் ரசிக்க முடியாததற்கு இரண்டு காரணம் ,ஓன்று நமது வலது காது ;இன்னொன்று இடது காது .
*அவன் காரியங்களை அரைகுறையாக செய்ய மாட்டான் ;காலும் ,அரைக் காலுமாக த்தான் செய்வான் .
*அவன் தலையில் பத்து செகண்டுகளுக்கு கூட எதுவும் நிற்காது -தலைவலி யை த்தவிர .
*அவன் எல்லா விசயத்திலும் தலை கீழ் தான் .அவன் செய்யும் காரியங்கள் கூடா ஏடாமாகாவோ,மாறு ஏறாகவோ தான் இருக்கும் .
போதுமா ....போதுமா ..போதுமா ...?(வடிவேல் ஸ்டைலில் படிக்கவும் )
இன்றைய நமது தளம் அட்டகாசமான தமிழ் தளம் .சென்று பாருங்கள் தமிழ் எத்தனை அழகான மொழி என்று உணர் வீர்கள் .தளத்தின் பெயரே தமிழ் தான் .