விசாரா கவிதைகள் .

ஹைக்கூ கள் சிலவற்றை எழுத முயற்சித்துள்ளேன் .எப்படி இருக்கிறது என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் .
'காமம் 'வெட்கியது
'காதல் 'பின் மறைந்து கொண்டது
பருவ வயது .....!
**************************************************
உடை கலைத்து

உடல் காண
உள்ளம் உருகவே
உதட்டில்
உற்பத்தியானது
'காதல் '
****************************************************
தாம்பூலம் வைத்து அழைத்தும்
தடுமாறுகிறது மனது
தாலி ஏந்தும் பெண்
என் காதலி .......!
******************************************************
மார்கெட்டில் சுற்றுகையில்
மாராப்பு சற்றே விலகியதும்
மகிழ்வாய் 'சபலத்தீ '
மாற்றான் மனைவி ........!
கொலுசு அணிகையில்
கொஞ்சமாய் சேலை மேலே ஏறியதும்
கொடூரமாய் 'கோபத்தீ '
என் மனைவி ..................!
**********************விவேகப்ரசன்னா .****************

ஓகே ..ஓகே ....நம்ம இன்னிக்கு பாக்கப் போற தளம் ....?
நம்ம கணினியில நிறைய மென்பொருள்கள் பயன் படுத்தி வரோம் .அதுல சில மென்பொருள்கள் லேட்டஸ்ட் வந்துருக்க என்னன்னு நமக்கு தெரியாது .இந்த தளத்துல எல்லா மென்பொருள்களும் புதிய பதிப்புகளும் நமக்கு இலவசமா இணை இறக்கலாம் .தளத்தின் பெயர் =அப்டேட் ஸ்டார் .

நாளை சந்திக்கலாம் .....!
blog comments powered by Disqus