போட்டோ எடுக்க கத்துக்கங்க...


புகைப்படம் எடுப்பது ஒரு கலை .அதை கற்றுக்கொள்ள நாம் நிறைய மெனக்கெட வேண்டும் .ஆனால் அதை மிக தெளிவாக தமிழில் கற்றுத்தர ஒரு தளம் இங்கே உங்களுக்காக .
காமிரா என்றால் என்ன ..?அதை பயன்படுத்துவது எப்படி ..?கோணங்கள் பார்ப்பது எப்படி....? இப்படி பல கேள்விகளுக்கு விடை தருவதுடன் மட்டுமல்லாமல் புகைப்பட போட்டி வைத்தும் அசத்துகிறார்கள் .சாம்பிளுக்கு இதோ ;

நாம வாங்கற மசாலா பொடி பாக்கெட்டுல இருந்து சமையல் புத்தகம் வரைக்கும் பாத்தீங்கன்னா வித விதமா அழகழகா உணவுப்பதார்த்தங்களை போட்டோ புடிச்சு போட்டிருப்பாய்ங்க! அதை பாத்துட்டு உண்மையாவே அந்த பதார்த்தம் பாக்கறதுக்கு ்பாக்கறதுகு நல்லாவும் சாபிடுவதற்கும் சுவையாவும் இருக்கும்னு நம்பி நாமலும் சமைச்சு பாத்தா வேற மாதிரி இருக்கும (பாக்கறதுக்கும் சரி,சுவையிலும் சரி!! :-))்.இவங்க எல்லாம் எப்படி இவ்வளவு அழகா உணவுப்பதார்த்தங்களை படம் எடுக்கறாங்க,அதே மாதிரி நாமலும் எடுக்கனும்னா என்னென்ன பண்ணனும் அப்படின்னு எல்லாம் பாக்கலாமா??

1.)வெளிச்சம்:இந்த விஷயம் எந்த ஒரு புகைப்படமா இருந்தாலும் மொதல்ல வந்து நிக்கற விஷயம். உணவுப்பொருட்களை பெரும்பாலும் அறையின் உள்ளே குறைந்த வெளிச்சத்தில் எடுப்போம் என்பதால் பெரும்பான்மையான சமயங்களில் படம் ஷேக் ஆகிவிடும். முடிந்த வரை வெளிச்சத்தை அதிகமாக்கிக்கொள்ள பாருங்கள்.சூரிய ஒளி கிடைத்தால் அதை விட சிறந்த வெளிச்சம் தரக்கூடிய விளக்கு கிடையாது.நல்லா சூரிய ஒளி பக்கத்துல வெச்சு படம் எடுங்க. சூரிய ஒளி நேரடியா படாம எதிலாவது பிரதிபலித்து பட்டால் நலம். சூரிய ஒளி இல்லையென்றால் நல்லா சுற்றி விளக்குகளை போட்டுக்கொள்ளுங்கள் ,அல்லது ஃப்ளாஷ் உபயோகித்துக்கொள்ளுங்கள். ஆனால் ஃப்ளாஷ் உபயோகித்தால் படத்தில் ஒரு விதமான செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டு விடுவதாக எனக்கு தோன்றும் ,அதனால் அதை அவ்வளவாக உபயோகிப்பதை நான் விரும்புவதில்லை.வெளிச்சம் ஒழுங்காக இருந்தால்தான் உண்வுப்பொருளின் நிறமும் நன்றாக கேமராவில் பதியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் புகைப்படம் பற்றியும் காமிரா பற்றியும் அறிய விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக்கவும் .
blog comments powered by Disqus