பிரீட்ஸ் க்ரெஸ்லர் ஒரு சிறந்த பியானோ கலைஞர் .அவரிடம் ஒருமுறை நண்பர் ஒருவர் கேட்டார் "உங்களால் மட்டும் எப்படி எவ்வளவு அற்புதமாக வாசிக்க முடிகிறது .உங்களது அதிர்ஷ்டம் தான் காரணமா ....?"
அவர் "நான் தினமும் கடுமையாக பயிற்சி செய்கிறேன் .ஒரு மாதம் செய்யவில்லை என்றால் என் ரசிகர்கள் அந்த வித்யாசத்தை உணர்வார்கள் .ஒரு வாரம் பயிற்சி செய்யாவிட்டால் என் மனைவி வித்யாசத்தை உணர்வார் .ஒரு நாள் பயிற்சி செய்யாவிட்டால் என்னாலேயே வித்யாசத்தை உணர முடியும் "என்றார் .