எழுந்திடு தோழா ...!

எழுந்திடு தோழா எழுந்திடு
எல்லையில்லா ஆற்றல் உன்னுள் உணர்ந்திடு .....!
ஆயாச பெருமூச்சை நிறுத்திடு
ஆகாயத்தை விழியால் அளந்திடு......!
பார்க்கு மிடமெங்கும் பரவிக் காணும்
ஆகாயத்தில்
பறந்து திரிந்திட இடமா இல்லை ....?
எல்லையற்ற பிரபஞ்சத்தின் பார்வையில் -நீ
எறும்பை போன்றாயினும்
எஃகாய்மாறி எழுந்திடு ....?
நாசியில் கலந்தோ டும்
சுவாசம் நிறையட்டும் ....!
நாளை வெற்றியை பேசி மகிழட்டும் ......!
**************************விவேகப்ரசன்னா *****************
blog comments powered by Disqus