சாவுக்கு வந்த சனம்
சன்னலருகே
சத்தமாய் அழுதது ....
சன்னல் வழியே
சீரியல் பார்த்து .!
சீரியலில் சண்டையாம்
சுரேஷ்க்கும் உமாவுக்கும்
சோகத்தில்
சோறிடவில்லை அம்மா ..!
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
-புலவர் மொழி
கேபிள் இல்லா வீட்டில் அமரக்கூட வேண்டாம்
-புடவை மொழி ..!
நான்கு நாள் டூர் சென்றும்
நனையவில்லை சந்தோசத்தில்
நான் கட்டிய மனைவி
நாடகங்கள் பார்க்கவில்லையாம் ..!
சீரியல் ..
எங்கோ சிலருக்கு
பணம் பண்டலாய் ..
இங்கோ பலருக்கு
மனம் மெண்டலாய் ...!
சீரியல் ..
மனங்களை சாக்கடையில்
தள்ளும் பெரும்புயல் ...!
------ கவலையுடன் விவேகப்ரசன்னா .!