அனைத்தும் உன்னுள் என்று
ஆன்ம ஞானி கூறியதில்
இல்லை மறுப்பு ...எப்படி .?
ஈடில்லா ஆன்மா நான் என
உரைத்தால் விளங்கிடாது
ஊன்றி கண் வைத்துப்பார்த்தால்
எங்கும் பரவியவன் நான் என்றும்
ஏகாந்தம் என் வாழ்வென்றும்
ஐயமின்றி தெரிந்திடும் ...
ஒருவனாக நான் இல்லையென்றும்
ஓடி ஒளிவதில் அர்த்தமில்லைஎன்றும்
ஔவியம் ஒழித்தால் என்றென்றும்
அஃது உணர்த்தும் ஞானியின் கூற்றை ..