
உலகின் மிகவும் பிரபலமானவர்க்குன்டான பிரச்சனைகள் எனக்கு அத்துப்படி . தினமும் ஆட்டோகிராப் வாங்க வரும் கூட்டத்திற்கு அளவில்லை .எனக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாதெனலாம் . வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்வார்கள் . எதற்குமே முகம் சுளிக்காமல் அனைவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கற்றுக்கொடுத்தார்கள் .இருப்பினும் புகழ்போதை உச்சியிலேறி நான் யார் தெரியுமாவென மமதையுடன் கேட்டதேயில்லை .அன்றும் வழக்கம்போல பணிமுடித்து இல்லம் திரும்பிக்கொண்டிருந்தேன் .வழியில் யாரும் கண்டுகொள்ளவேயில்லை .டிஸ்னிலேண்ட் உடைமாற்றும் இடத்தில் எனது மிக்கி சீருடை சிரித்துக்கொண்டிருந்தது .