1970 இல் அன்னையைத் தரிசிக்க வந்த ஒருவர் பொதுத் தரிசனத்தில் அவரைக் கண்டு பிரமித்துப்போய் மறுநாள் அவருடைய படம் ஒன்றை வாங்க வந்தார். அன்னைக்கு அப்பொழுது வயது 93. வந்தவருக்கு அன்னையின் படத்தைக் கொடுத்தவுடன், அதை அவர் வாங்கிக்கொள்ளாமல் எனக்கு மதர் படம் வேண்டும் என்றார். கொடுத்த படத்தில் அன்னையின் வயது 80. அவருக்குக் கோபம் வந்து, "என்னை ஏமாற்றுகிறீர்களா?'' என்று கேட்டார். அங்கிருந்து படம் விற்கும் மற்ற எல்லா இடங்களுக்கும் சென்று அன்னையின் படம் கேட்டு வயதானவரைப் படத்தில்
பார்த்துவிட்டு, "இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. எவரும் உண்மையைச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். நான் நேற்று 25 வயது அன்னையைக் கண்டேன். அவர் படம் கேட்டால் 80 வயதுள்ளவருடைய படத்தைத் தருகிறார்கள்'' என்று விரக்தியாகப் பேசினார்.
உடனே அன்னையின் சிறு வயதுப் படத்தைக் காட்டினார்கள். அவர் அதிகமாக மகிழ்ந்து போய், "இவர்தான் நான் நேற்றுத் தரிசனத்தில் கண்டவர்'' என உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார். சூட்சுமப் பார்வையுள்ளவர் அவர். அவருக்கு அன்னை தரிசனம் தந்த 7, 8 நிமிஷங்களும் இளவயதாகத் தோன்றியிருக் கின்றார்கள்.

அன்னை பற்றி மேலும் படிக்க இங்கே செல்லுங்கள் .