வருமுன் -வள்ளுவர்


அழகிய சோலை ஒன்றில் எறும்புகளும் வெட்டுக்கிளிகளும் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அப்போது கோடை காலம். அந்த வெயிலிலும் வியர்வை சிந்தி தானியங்களை சேகரித்து வந்தன எறும்புகள். வெட்டுக்கிளிகளோ ஆட்டமும் பாட்டமும் ஆக மகிழ்ச்சியில் திளைத்திருந்தன. அப்படி அந்த வழியே தானியத்தை சுமந்து சென்ற எறும்பு ஒன்றிடம், "இந்த கடின உழைப்பால் என்ன பயன்? வந்து எங்களுடன் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் " என்றது ஒரு வெட்டுக்கிளி." வருகின்ற குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று நேற்றுக்கூட வானிலை அறிவிப்பில் பார்த்தேன். அதனால் சற்று அதிகமாக நாங்கள் இப்போது உழைக்கிறோம். நண்பர்களே, நீங்களும் எங்களுடன் சேர்ந்து தானியங்களை சேமித்திடுங்கள் " என்றது அந்த எறும்பு." குளிர்காலத்தை பற்றி இப்போது என்ன கவலை? தற்போது உண்பதற்கு நிறைய தானியங்கள் உள்ளனவே!" என்றது வெட்டுக்கிளி ஆடியபடியே." உன்னிடம் பேசி பயன் இல்லை" என்றபடியே அங்கிருந்து நகர்ந்தது எறும்பு.கடுமையான குளிர்காலம் வந்தது. உணவு தட்டுப்பாட்டால் பட்டினிக்கு உள்ளானது வெட்டுக்கிளிகள். அதே நேரத்தில் சேமித்த தானியங்களை எறும்புகளை பொறுப்பாக பகிர்ந்து உண்பதை பார்த்த வெட்டுக்கிளிகள்...

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும். [ குற்றம் கடிதல் 44 : 5 ]{ வருமுன்னர் காத்துக் கொள்ளாதான் வாழ்க்கை, தீ முன்னர் வைத்த பஞ்சு போல் அழிந்து விடும் }




blog comments powered by Disqus