சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே.
உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகைத்தலினால் வருகிறது. புகைத்தலினால் அல்சீமர் போன்ற நோய்கள் விரைவிலேயே தாக்குகிறது என்று புள்ளி விவரங்களும், மருத்துவத் தகவல்களும் தொடர்ந்து மக்களை எச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னும் புகைப் பழக்கம் ஒழியவில்லை.
புகையை நிறுத்த கீழ்க்கண்ட வழிகளை முயன்று பாருங்கள்.
1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே வீட்டில் இருக்கும் லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள். இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி வால் பிடித்த கதையாய் மாறிவிடும்.
1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே வீட்டில் இருக்கும் லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள். இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி வால் பிடித்த கதையாய் மாறிவிடும்.
.2. புகையைத் தூண்டும் காரணிகளை விலக்குங்கள். காபி குடித்ததும் புகைக்கத் தோன்றினால் காபியை விட்டு விடுங்கள். உண்டபின் சிகரெட் பிடிக்கத் தோன்றினால் சற்று தூரம் நடந்து விட்டு வாருங்கள். வழக்கமாக சிகரெட் வாங்கும் கடைப்பக்கமாய் கடைக்கண் பார்வையும் வைக்காதீர்கள்.
.3. உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா பழக முடிந்தால் யோகா பழகுங்கள், காலையில் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், புகைக்கும் விருப்பத்தை இவை மட்டுப்படுத்தும். அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது என உங்களை உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்.
.4. புகையை விட்ட சில நாட்கள் சோதனைக் காலம். நான் உனக்கு அடிமையாக மாட்டேன் – என உள்ளுக்குள் உறுதி கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
.5. உங்கள் சூழலை மாற்றுங்கள். புகைக்கும் நண்பர்களை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள், புகைக்கும் கடை பக்கமாய் ஒதுங்குவதை விடுங்கள். புது சூழலை உருவாக்குங்கள். புகைக்கத் தோன்றினால் உடலுக்கு ஊறு விளைவிக்காத சூயிங்கம் போன்றவற்றை மெல்லலாம்.
.6. புகைக்காமல் கடந்து போகும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்காய் வாழும் வாழ்க்கையின் நீளம் அதிகரிக்கும் என ஆனந்தம் அடையுங்கள். பாராட்டிக் கொள்ளுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்.
.7. அலைபாயும் மனமே புகையின் தோழன். மனதை கட்டுக்குள் வைத்திருக்க தியானம், நல்ல இசை என பழகுங்கள்.
.8. மூச்சுப் பயிற்சி பழகுங்கள். ஆழமாக மூச்சை விடும் பயிற்சி உடலுக்கு உயிர்வளியை அதிகம் கொண்டு வரும். அது உடலை தெம்பாக்கி, புகைக்கும் விருப்பத்தைக் குறைக்கும்.
.9. ஊறு விளைவிக்காத சிகரெட் என எதுவுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிகரெட்டை விட்டபின் சற்று உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் உடலின் சுரப்பிகளும், செரிமானமும் மீண்டும் சரிவர செயல்பட ஆரம்பித்ததன் அறிகுறி அது. உணவை வகைப்படுத்துங்கள். முடிந்தமட்டும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.
.10. சரியான தூக்கம் கொள்ளுங்கள். சரியான தூக்கம் இருந்தால் உடல் உற்சாகமடைந்து தேவையற்ற சிந்தனைகள் மறையும்.
thanks to kelvi.