நானாக நானில்லை ..!


அப்பா சொன்னார் ..,
பரதன் மாதிரி படிக்கணும் டா
படித்தேன் ..
உமர் மாதிரி உடுத்தனும் டா
உடுத்தினேன் ..
சந்தானம் மாதிரி சம்பாதிக்கணும்டா
சம்பாதித்தேன் ..
வசந்தன் மாதிரி வாழணும்டா
வாழ்ந்தேன் ..
நேற்று தான் சந்தித்தேன்
என் பால்ய கால சினேகிதியை
'நீ முன்ன மாதிரி இல்லடா -ரொம்ப
மாறிட்டே 'என்றாள்.
அவளிடம் யார் சொல்வது
நான் -நானாக இல்லை என்பதை ...!
blog comments powered by Disqus