உணவு:உயிரினங்களின் அத்தியாவசியத் தேவைகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். உடலின் எரிபொருள். எல்லா உயிரினங்களின் வாழ்விலும் நலனிலும் பெரும்பங்கு வகிப்பது; மனிதனை உருவாக்குவது அவன் உருவம், உயரம், அழகு, உள்ளம் யாவற்றையும் உருவாக்கவும் மாற்றவும் வல்லது. நலத்தையும், பலத்தையும் தரவல்லது மக்கட் பிறப்பை பெருக்குவதிலும், கட்டுப்படுத்துவதிலும் இது ஆற்றும் பங்கு மிகப்பெரிது. உள்ளத்தின் உயர்வையும் உடலின் திறனையும் பெருக்க வல்லது. மனித நாகரீகத்திலும் பண்பாட்டிலும் இது பெரும் பங்கு வகிக்கிறது.
பசி என்பது என்ன?உணவின் தேவையை உணர்த்தும் ஏற்பாடு. உடலியக்கத்தின் ஆதார எரிபொருள் தேவைக்கான சமிக்கை. சக்தி தேவையின் பொருட்டு உடனே உண்ணச் சொல்லும் உடலின்/உள்ளுணர்வின் உந்துதல், உண்ணாமல் இருக்கும் போது நம்மால் (மூளையால், மனத்தால், உடலால்) உணரப்படுவது. மேலும் உணவு தவிர்த்து வேறு வகையான உணர்வுகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் ஏங்குவது. (காதல், இலட்சியம், காமம், புகழ்....இன்னும் பிற) என்றும் அறியப்படும்
இப்படிப்பட்ட பசி நிலைகளால் உலகில் வாடுவோர் 75% உள்ளனர். இந்தியாவில் மட்டும் 90% மக்கள் (அனைத்துவகை) பசிகளுக்கு அடிமையாய் உள்ளனர்.
63% இந்தியக் குழந்தைகள் பட்டினியால் ....ஊட்டச்சத்துக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் மஹாராஷ்டிரா, பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களாகிய நாம், ஒரு விசயத்துக்காக கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம், ஆம் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும்தான் (ஒப்பீட்டளவில்) நெடும்பசியால் வாடுவோர் எண்ணிக்கைக் குறைவு (47% சதவீதத்தினர்). தமிழக அரசின் மதிய உணவுத்திட்டமே காரணம்.
அட்டகாசமான குட்டிஸ்