சூரிய பகவான் அனைத்தும் அறிந்த ஞானி .அவருக்கு வியாகரணம் எனப்படும் வேதாந்த இலக்கணம் தெரியும் .அதை படிக்க அனுமானுக்கு ஆசை .அதை சூரியனிடம் தெரிவித்தார் .அதற்க்கு சூரியன் "மாருதி !நமக்கு தெரிந்தவற்றை பிறருக்கு சொல்லி கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அது பாவம் .நான் உனக்கு கற்று தருகிறேன் ஆனால் நான் லோக சஞ்சாரி ஓரிடத்தில் அமர்ந்து பாடம் சொல்லித்தர முடியாது .நான் அமர்ந்தால் உலக சஞ்சாரமே நின்று போகும் .மேலும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரக்கணக்கான யோசனை தூரத்தை கடந்து விடுவேன் .என் வேகத்துக்கு ஈடாக என்னுடன் வந்தால் நான் கற்று தர தயார் "என்றார் .
அனுமனும் சம்மதித்து அவருக்கு ஈடான வேகத்துடன் பறந்து சென்று பாடத்தை கற்று தேர்ந்தார் .
மாணவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் .பாடங்கள் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கடும் முயற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும் .
சரி ...நமது குழந்தைகளை படிக்க வைக்க ,அறிவாளிகளாக்க சில நல்ல தளங்களை கண்டேன் .அதை கீழே தருகிறேன் .சென்று பாருங்கள் மட்டுமல்ல குழந்தைகளுக்கும் காட்டுங்கள் .நிச்சயம் பயன்படும் ....என்ன சரிதானே ..?
பாடங்களை படிக்கும் ஆர்வம் வளர ,கணக்கு பாடம் இனிக்க ,ஏன் படிக்க வேண்டும் என்று உணர இங்கே .
வான்வெளியை ரசிக்க ,விண்வெளி பற்றி அறிய அபூர்வ புகைப்படங்களுடன் கண்டுகளிக்க இங்கே .
விளையாடி மகிழ நல்ல முறையில் பொழுதைக்கழிக்க இங்கே .
என்ன ஓகே தானே நண்பர்களே ...?