பாலாவையே பிதாமகன் என்று சொல்லலாம் 2000 ல் எழுந்த புதிய அலைக்கு. “சேது”வில் துணிச்சலாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி இன்று “கற்றது தமிழ்” வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
மகேந்திரன்களாலும்……..பாலுமகேந்திராக்களாலும்…….. துளிர்த்திருந்த திரைத்துறை சகலகலாவல்லவன்களால் சகதியில் அமிழ்த்தப்பட்டது. அதற்கும் முன்னர் நாடகபாணிப் படங்களுக்கு ஆப்படித்து ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே சுழன்று கொண்டிருந்த காமிராவை வயல்வெளிகளுக்கும்……..புழுதிக்காட்டுக்கும் சுமந்து சென்றதில் பாரதிராஜாவுக்கு பிரதான பங்கிருந்தது. மெல்லிய -நுண்ணிய உணர்வுகளைப் பிரதிபலித்த தமிழ்த் திரையுலகம் மசாலாக்களில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் உருவான மிக நீண்ட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்தான் பாலா.
தங்கர்பச்சானின் “அழகி”யோ ஒவ்வொருவரையும் தத்தமது பால்யத்துக்கே இழுத்துப் போய் நோஸ்டால்ஜியாக்களில் கிறங்கடித்தது. தனலட்சுமியும்……..சண்முகமும் ஓசைப்படாமல் மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
அண்ணன் மனைவியை அடைவது எப்படி? தம்பி மனைவியை தட்டிக் கொண்டு போவது எப்படி? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த “வாலி”கள் லிங்குசாமியின் “ஆனந்த(ம்)”த்தின் முன்னே காணாமல் போனார்கள்.
“இயற்கை”யில் கால் பதித்த ஜனநாதனின் பயணம் “ஈ” யில் மற்றொரு பரிமாணத்தையும் காட்டியபடி தொடர்கிறது. “ஈ” சாதாரண படமல்ல. மருத்துவர் புகழேந்தி எழுதிய “எய்ட்ஸ் : ஓர் உயிரியல் ஆயுதப் போர்” (AIDS : A Biological Warfare) என்கிற நூலின் காட்சி வடிவம்தான் என்பது வெகு சிலருக்கு மட்டுமே புரிந்த உண்மை.
‘வால மீனுக்கும்……..விலங்கு மீனுக்கும்’ நடந்த கல்யாணக் கச்சேரியில் கண்ணில் பட்டவர்தான் மிஷ்கின். இந்த மனிதருக்குள் சொல்ல வேண்டிய சேதிகள் அநேகம் இருக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுதான் “சித்திரம் பேசுதடி”.
பசும்பொன்……..பாஞ்சாலங்குறிச்சி என்று வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்த சீமானை ‘தம்பி வா……..தலைமை ஏற்க வா……..” என மறுபடியும் அழைத்து வந்ததுதான் “தம்பி”. சமூக அவலங்களைச் சாடித் தீர்ப்பதில் எவனுக்கும் சளைத்தவனில்லை இந்தத் தம்பி என்று நிரூபித்த படம்.
இவற்றுள் ராதா மோகனின் உலகம் கொஞ்சம் வேறு வகையான உலகம். மேல்தட்டு மாந்தர்களது உலகைச் சுற்றி நிகழும் உணர்வலைகளைப் பதிவு செய்வதில் “மொழி” வகித்த பங்கு பிரதானமானது. மொழியை மொழியால் விளக்க முயற்சிக்காமல் உணர்வால் உணரவைக்க முற்பட்ட படம் எனலாம்.
‘காதலே கூடாது……..காதலிச்சா ஒவ்வொருவருக்கும் இதுதாண்டா கதி…….. என அச்சுறுத்துகிறார்’ என்கிற குரல்களுக்கு இடையில் அறிமுகமானவர்தான் பாலாஜி சக்திவேல். தென் மாவட்டங்களில் ஒளிந்திருக்கும் சாதீய முகத்தை அப்பட்டமாகச் சொன்னது “காதல்”. படம் பார்த்தவர்களில் சிலரை அது பயமுறுத்தியதும் உண்மைதான்.
அதைப்போலவே அதை எப்படி முறியடிப்பது என்கிற சிந்தனையையும் நிச்சயம் விதைக்கும் காதல்.
அண்ணன்……..தம்பியின் நேசம் ததும்பும் உறவை……..தோல்வியைத் தவிர வேறெதையுமே அனுபவித்திராதவன் வலியை……..இவ்வளவு தத்ரூபமாகச் சொல்லமுடியுமா? என்கிற கேள்வியை எழுப்பியது வசந்தபாலனின் “வெயில்”.
‘நானிருக்கிறேன்’ என தமிழ்த் திரைக்கு நம்பிக்கையூட்டும் நாயகனாய் முருகேசனாய் வரும் பசுபதி.
பெரும்பாலும் தமிழ்ப் படங்கள் சாதீயத்தை சொல்வதோடு நின்றுவிடும்…….. ஆனால் சொன்னதோடு நிற்காமல் அதன் மீதான சிறு விமர்சனத்தையாவது சுமந்து வந்த படம்தான் அமீரின் பருத்தி வீரன்.(திருநங்கையர் எனும் மனிதர்களை கொச்சைப் படுத்தியதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்……..)
தகவல் தொழில் நுட்பத் துறையினர்…….. அதுவல்லாத துறைகளில் பயின்றவர்கள்……..பீட்ஸா கார்னர்களில் ஒதுங்குபவர்கள்……..ATM செண்டருக்கு உள்ளிருப்பவர்கள்……..அதற்கு வெளியே இருப்பவர்கள்……..எனச் சகலரையும் அசைத்துப் பார்த்த படம்தான் ராமின் “கற்றது தமிழ்”.

சொல்ல வந்ததில் கொஞ்சம் மிச்ச சொச்சம் இருந்தாலும்……..இன்னும் கொஞ்சம் கூடுதல் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் இவர்களோடு சேரக்கூடியவர்தான் சமூக அக்கறையோடு “ராமேஸ்வர(ம்)”த்தை இயக்கிய செல்வம்.
இவர்களுக்கிடையில் அவ்வப்போது எதையாவது சொல்லியாக வேண்டும் என்கிற அக்கரையில் உள்ளவர்கள்தான் பார்த்திபனும், சேரனும்.

மேலும் பல நல்ல விஷயங்களை நக்கல் கிண்டலுடன் கலந்து படிக்க பாமரனை பாருங்கள் .