இது தான் மகிழ்ச்சி .


ஒருவன் மிக சோகத்துடன் வந்து முல்லாவை சந்தித்தான் ."என் வாழ்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் எல்லாமே வெறுப்பாக உள்ளது .மனைவி ,குழந்தைகள் இருக்கிறார்கள் ,எந்தக்குறையும் இல்லை ,இருந்தாலும் என்னால் மகிழ்ச்சியாக்க இருக்க முடியவில்லை "என்றான் .

அவனை நன்றாக கவனித்த முல்லா திடீரென்று அவன் கையிலிருந்த பணப்பையை பிடுங்கி கொண்டு ஓடினார் .

ஐயோ என் பணம் "என்று அலறிக்கொண்டே ஓடினான் பறிகொடுத்தவன் .வேகமாக ஓடிய முல்லாவை அவனால் பிடிக்க முடியவில்லை .அவன் வேகம் குறையத்தொடங்கியது .சிறிது தூரத்தில் அவனது பணப்பை கிடந்தது .அதை எடுத்து திறந்து பார்த்தான் .பணம் அப்படியே இருந்தது .

பணம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விட்டான் அவன் .

அருகே புதரில் மறைந்திருந்த முல்லா வெளிப்பட்டார் ."இப்போது உனது முகத்தில் தெரிகிறதே அது தான் மகிழ்ச்சி புரிகிறதா ..?"என்று கூறினார் முல்லா .


சரி ...சில மகிழ்ச்சி அளிக்கும் தளங்களை இன்று பார்ப்போமா ...?

புது வருடம் பிறக்க போகிறது ,நமக்கு பிடித்தமான காலண்டரை நாமே வடிவமைக்கலாமா ...இங்கே செல்லுங்கள் .

டைரி எழுதும் பழக்கம் இருக்கா உங்களுக்கு ,உண்டெனில் உங்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவும் .

வீட்டிற்க்கு அலங்காரம் செய்வது முதல் புத்தகங்களுக்கு அட்டை போடுவது வரை ஏராளமான விஷயங்களுக்கு செய்முறை விளக்கம் தருகிறது இந்த தளம் ..சென்று பாருங்கள் .

அப்றமா பாக்லாம் சர்யா ...?
blog comments powered by Disqus