ஆயிரம் ரூபாய் நோட்டும் ,அம்பது பைசா நாணயமும் சந்தித்துக்கொண்டன .ஆயிரம் ரூபாய் நோட்டு பயங்கர பந்தாவாக "நான் நடிகர்கள் கையில் புரள்கிறேன் ,!தொழில் அதிபர்கள் பெட்டியில் தூங்குகிறேன் !ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கிறேன் !விலை உயர்ந்த கார்களில் பறக்கிறேன் .!வாழ்க்கையே பரபரப்பாக இருக்கிறது ..!ஆனால் பாவம் நீ இதையெல்லாம் பார்த்திருக்கவே மாட்டாய் !ம்ம் ..என்ன செய்வது பாவம் நீ .."
ஐம்பது காசு நாணயம் அமைதியாக சொன்னது "சரிதான் ...நான் அங்கெல்லாம் போய் அவஸ்தை பட்டது கிடையாது ..!கோவில் உண்டியல்களில் கடவுள் என்னை பாது காக்கிறார் ..!மண் உண்டியல்களில் குழந்தைகள் என்னை பத்திரமாக வைத்திருக்கின்றார்கள் ..!இது பத்தாதா என்ன ..?"
தன்னை பற்றிய கம்பீரம் எளியவர்களிடம் இருக்குமானால் ,பகட்டு மனிதர்களின் அலட்டல் கூட அடங்கித்தானே போகவேண்டும் ..!
சரி ...இன்று நாம் சில தளங்களை பார்க்க போகலாமா ...?
மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் ,உதவும் பல தலைப்பிலான கட்டுரைகள் இங்கே கிடைக்கும் .உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் அளிக்கலாம் . பாரத் பீடியா
வித்யாசமான தேடல்கள் உங்களுக்கு உண்டெனில் இந்த தளம் உங்களுக்கே .!
நீங்கள் ஏதாவது நிகழ்ச்சி நடத்த அதை பிறருக்கு தகவல் கொடுக்க ,எங்கெங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கின்றன என தெரிந்து கொள்ள இந்த தளம் மிகவும் உதவும் ..சென்று பாருங்களேன் ...!
பிறகு ..பார்க்கலாம் ..பை ,....!