வெற்றி மேல் வெற்றி பெற்ற ஒருவரிடம் உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன ..?என்று கேட்கப்பட்டது .
அதற்க்கு அவர் தனது அலுவலகத்தில் தங்க பிரேம் இட்ட பென்சிலின் புகைப்படத்தை காட்டி இதுதான் என்றார் .
"இந்த பென்சில் எனக்கு ஐந்து விஷயங்களை கற்று தந்தது
-பல விஷயங்களை எழுதுவதற்கும் ,வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது .
-அவ்வப்போது நாம் அதனை சீவுகிறோம் ,சீவும் போதெல்லாம் கூர்மை அடைகிறது .
-வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரே சீராக இருக்கிறது .
-தவறுகள் செய்தாலும் ,அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது .
-மிக சிறிய தானாலும் கடைசி வரை தனது சுவட்டை காகிதத்தில் பதிக்கிறது .
இதை பார்த்துதான் நான் என் வாழ்கையை சீரமைத்து கொண்டேன் ."
இது எப்படி இருக்கு ....யோசிங்க ...நம்மாலும் ஜெயிக்க முடியும் ...!
சரி ....இன்றைய தளம் என்ன ....?
புகைப்படங்களை உடைத்து ,கலைத்து போட்டு விட்டு பிறகு அதனை ஓன்று சேர்க்கும் சிக் -சா புதிர் விளையாட்டு விளையாடி பார்ப்போமா ...
தளத்தின் பெயர் ...சிக் சா பிரேக் .
பிறகு சந்திப்போமா .......