ஒரு முறை மேலுலகத்திலிருந்து சில நல்ல விஷயங்களுக்காக இரண்டு பெண்களை பூலோகம் அனுப்ப இறைவன் முடிவு செய்தார் .அவர்களுக்கு சொல்லி அனுப்பப்பட்டது .குறிப்பிட்ட நேரம் கடந்து மிக தாமதமாக இருவரும் வந்து சேர்ந்தனர் .இறைவனுக்கு மிகுந்த கோபம் .ஏன் தாமதம் எனக்கேட்டார் .அதற்க்கு ஒரு பெண் கூறினாள்"இறைவா ..நான் முதல் முறையாக பூலோகம் செல்வதால் ,அழகாக செல்ல வேண்டும் எனது அழகின் மூலம் பூலோக வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவேண்டும் என முடிவு செய்தேன் .எனவே என்னை அலங்கரித்து கொள்வதில் சிறிது தாமதமாகிவிட்டது ,மன்னித்து விடுங்கள் "
இன்னொரு பெண் "இறைவனே ...நான் பூலோகவாசிகளுக்கு எனது குரலின் மூலம் இசையின் மூலம் மகிழ்ச்சி கொடுக்க விரும்பினேன் .எனவே பயிற்சி எடுத்ததில் தாமதம் ஆகி விட்டது .மன்னித்துவிடுங்கள் "
இறைவன் கூறினார் "உங்களது எண்ணம் ,செயல் இரண்டுமே நல்லது தான் .இருந்தாலும் தாமதமாய் வருவது மிகத்தவறு .எனவே நீங்கள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் .அழகின் மூலம் மகிழ்சி ஏற்படுத்த நினைத்த நீ மின்னலாய் போ ..உன்னை பார்த்தவுடன் மனிதர்கள் கண்ணை மூடிக்கொள்வார்கள் .இசை பாடும் பெண்ணே நீ இடியாக போ ..உன் குரல் கேட்டதும் மனிதர்கள் காத்து பொத்தி கொள்வார்கள் ."
இப்படித்தான் உருவானதாம் இடியும் ,மின்னலும் .இது கட்டு க்கதையாகவே இருந்தாலும் .நாம் கற்றுக்கொள்ள வேண்டியது தாமதம் தவறு என்பதை ...சரி தானே ...?
இன்று நாம் பார்க்க போகும் தளம் ஜோக்ஸ் தளம் .இங்கே அனைத்து விதமான ஜோக்குகளும் படிக்க கிடைக்கும் .படித்து மகிழலாம் .நண்பர்களுக்கும் அனுப்பலாம் .சென்று பாருங்கள் ....நாளை மீட் பண்ணுவோம் .