நூலக மௌனம் அவள் பேச்சில்
அவன் காதலிக்கத் தொடங்கினான் ....!
தென்றல் தடவல் அவள் பேச்சில்
திருமணம் செய்து விட்டான்............!
நதி நீரின் சலசலப்பு அவள் பேச்சில்
ஓராண்டு மண வாழ்க்கை ......!
அருவியின் பேரிரைச்சல் அவள் பேச்சில்
ஐந்தாண்டு மண வாழ்க்கை .......!
மீண்டும் கிட்டுமா நூலக மௌனம் ......?
காலம் கடந்த கனவுகள் ...,
கழுவிக் கவிழ்த்த கலயத்தில்
காணுமா எங்கேனும் ஓர் பருக்கை .....?
தேடல் .....இனி கிடைக்காது
உள்ளம் பாடும் ஓர் பாடல் ......!
மௌனம் எங்கு தேடினும்
மௌனமாய் கிட்டுவதில்லை .........................!
****************************விவேகப்ரசன்னா ***************
மேலே உள்ளது என்னுடைய கவிதை ,இது போல வேற நிறைய கவிதை படிக்க உங்களுக்கு ஆசை இருந்தா மரத்தடிக்கு போங்க .....!
மீண்டும் வருவேன் ..............