
ஒரு பணக்காரன், வந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம்.''என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?'' என்று புலம்பினான்.''அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?'' என்று கேட்டார்.''ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.''''அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?''''கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்.''''சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?''பணக்காரன் யோசித்தான்.''அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்.''''ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?''''என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் நான்தான்!''''உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான் பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?''இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் பதிலில்லை.
நிறைய நல்ல குட்டிக்கதைகளை படிக்க மற்றும் இஸ்லாம் தகவல்களைப்பெற இங்கே போங்க சார் .